Business Model Canvas (BMC) – Part 3 வணிக / தொழில் வடிவமைப்பு மாதிரி வரைபடங்கள் – பகுதி 3

கடந்த கட்டுரையில் நாம் செய்யும் தொழிலுக்கான மதிப்பு வரையறைகள், அதற்கு ஏற்ற வாடிக்கையாளர் குழுக்கள்,  பொருள் அல்லது சேவையை கொண்டு சேர்க்கும் சரியான விநியோக சங்கிலி, பொருளை பயன்படுத்தும் வாடிக்கையாளருடன் நம்முடைய உறவுகள் போன்றவற்றை எவ்வாறு எழுத்துவது என்பது குறித்து பார்த்தோம். 

நாம் செய்யும் தொழிலில்  உள்ள வருவாய் வழிகள் (Revenue Streams), நாம் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள் (Key Activities), இந்த செயல்கள் (Key Activities) செய்ய நம்மிடம் உள்ள வளங்கள் (Key Resources) இல்லாத வளங்கள், நம்மிடம் இல்லாத வளங்களுக்கு யாரை முக்கிய கூட்டாளிகளாக (Key Partners) தேர்வு செய்கிறோம்?, தொழில் மாதிரியில் உள்ள செலவு அமைப்புகள் (Cost structure) போன்றவற்றை எவ்வாறு எழுதுவது என்பது குறித்து இந்த கட்டுரையில்  விரிவாக பார்க்கலாம். 

5. வருவாய் வழிகள் (Revenue Streams)

நிறுவனத்தின் நீடித்த வளர்ச்சிக்கு (Long Term Growth) சரியான நீண்ட கால அமைப்பிலான நிலையான (Sustainable & Standard) வருவாய் மாதிரி அவசியம்.

  • நாம் கொடுக்கும் எந்த மதிப்புக்கு வாடிக்கையாளர் உண்மையாக பணம் செலுத்த (Willingness to Pay for Value)விரும்புகிறார்?
  • இப்பொழுது எந்த மதிப்புக்கு (Current value) பணம் செலுத்துகிறார்கள்? 
  • எவ்வாறு பணம் (Mode of Payment) செலுத்துகிறார்கள்?எவ்வாறு பணம் செலுத்த விரும்புகிறார்கள்?
  • ஒவ்வொரு வருவாய் வழியும் (Revenue source) மொத்த வருவாயில் எவ்வளவு (Total Revenue பங்காற்றுகின்றன?

வருவாய் வகைகள் (Revenue Types)

கீழ்க்காணும் மாதிரிகளில் வருவாய் இயற்ற முடியும்.  

  • சொத்து விற்பனை (Asset sales)
  • பயன்பாட்டு கட்டணம் (Usage fees)
  • சந்தா கட்டணம் (Subscription fees)
  • கடன் /வாடகை / போக்கியம் (Loan, Rent, Lease)
  • உரிமம் வழங்குதல் (Licensing)
  • தரகு கட்டணம் (Brokerage)
  • விளம்பரம் (Advertisement)

வருவாய் குறித்து பேசும் போது விலை நிர்ணயம் குறித்து தெரிந்து கொள்வதும் அவசியம்.

நிரந்தர விலை (Fixed Pricing)

  • அட்டவணை விலை (List Pricing)
  • பொருள் சிறப்பம்சம் சார்ந்த விலை (Feature Pricing)
  • வாடிக்கையாளர் குழு சார்ந்த விலை (Customer segment dependent pricing)
  • அளவு எண்ணிக்கை சார் விலை (Volume pricing)

மாறுபட்ட விலை (Dynamic Pricing)

  • பேச்சு வார்த்தை விலை (Negotiation pricing)
  • பேரம் பேசுதல் (Bargaining)
  • மகசூல் சார் விலை (Yield dependent)
  • நிகழ்நேர விலை (RealTime Pricing) 

இவை ஒவ்வொன்றையும் உதாரணத்துடன் வரும் காலங்களில் விலை நிர்ணயம் குறித்து விரிவாக எழுதும் கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.

6. முக்கிய செயல்கள் (Key Activities)

நம்முடைய மதிப்புகளை வாடிக்கையாளருக்கு சிறப்பாக வெற்றிகரமாக வழங்கிட நாம் செய்ய வேண்டிய செயல்கள் முக்கிய செயல்கள் பகுதியில் திட்டமிட பட வேண்டும்.

செயல்கள் மூன்று வகைப்படும்:

  1. உற்பத்தி சார் செயல்கள் (Production activities)
  2. சந்தை சார் செயல்கள் (Market activities)
  3. வினை தீர் செயல்கள் (Problem solving activities)

கீழ்காணும் கேள்விகள் செயல்களை திறம்பட செய்ய உதவும்.      

  • எந்த மாதிரியான செயல்கள் நம்முடைய தொழில் மதிப்பு வரையறைகக்கு தேவை படுகிறது?
  • வருவாய் வர எந்த மாதிரி செயல்கள் (Revenue Generating Activities) தேவை?
  • செலவு குறைக்கும் (Cost Reduction Activities) செயல்கள் எவை?
  • திறன் அதிகரிக்கும் (Efficiency Improving Activities) செயல்கள் எவை? 
  • விநியோக சங்கிலி சார் (Supply Chain Activities) செயல்கள் என்ன?

7.  முக்கிய வளங்கள் (Key Resources) 

தொழில் நடத்த தேவையான அனைத்து செயல்களையும் திட்டமிட்ட பின், நம்மிடம் இருக்கும் வளங்கள் என்ன, இல்லாத வளங்கள் என்ன என்பதை தெளிவாக ஆய்வு செய்ய வேண்டும். இல்லாத வளங்களுக்கு முறையான திட்டமிடல் இருக்க வேண்டும்.   

  • எந்த மாதிரியான வளங்கள் நம்முடைய தொழில் மதிப்பு வரையறைக்கு தேவைப் படுகிறது?
  • நம்முடைய பணியாளர் யார் ?
  • விநியோக முகவர் யார்?
  • விநியோக சங்கிலி என்ன?
  • வருவாய் வழிகள் என்ன?
  • நம்மிடம் இருக்கும் அறிவு சார் வளங்கள் என்ன? தொழில்நுட்ப வளம் என்ன?
  • குறுகிய கால வருவாய் தரும் வளம் என்ன? நீண்ட கால வருவாய் வளங்கள் என்ன?

8. முக்கிய கூட்டாளிகள் (Key Partners)

எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், எவ்வளவு சிறிய நிறுவனமாக இருந்தாலும் தொழில் வடிவமைப்பு மாதிரியில் உள்ள அனைத்து செயல்களையும் செய்வதற்கு தேவையான அனைத்து வளங்களையும் கொண்டிருப்பது இயலாத காரியம். நம்முடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை தெளிவாக உணர்ந்து, நம்மிடம் இல்லாத பலவீனமாக உள்ள வளங்களுக்கு சரியான கூட்டாளிகளை தேர்வு செய்வது நீண்ட கால வளர்ச்சிக்கு அவசியம்.

  • யார் நம் கூட்டாளிகள்?
  • யார் நமக்கு இடுபொருள் (அ ) முக்கிய சேவை (Input/ Service) வழங்குபவர்?
  • யார் நம்முடைய விநியோகஸ்தர்கள் (Distributors)?
  • யார் நம்முடைய போட்டியாளர்கள் (Competition)?
  • நம் பொருள் அல்லது சேவைக்கு இணக்கமான சேவை (Parallel service) அல்லது பொருள் வழங்குவது யார்?    
  • எது மாதிரியான வளங்களை நாம் கூட்டாளிகளிடம் இருந்து பெறுகிறோம்?
  • ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளரை, கூட்டாளிகளாக (Customer to Partner) மாற்றும் திட்டம் என்ன? 
  • எது மாதிரியான செயல்களையும், சேவைகளையும் கூட்டாளிகள் செய்து கொண்டிருக்கின்றனர்?
  • அவர்களுடைய இப்போதைய மற்றும் விரிவு படுத்தும் திறன் (Expansion Capacity) என்ன?

கூட்டு சேர்வதற்கான அவசியம்

  • மேம்படுத்துதல் (Improvement)
  • விரிவாக்கம் (Expansion)
  • தகவமைத்தல் (Optimisation)
  • அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை குறைத்தல் (Risk & uncertainty reduction)
  • நம்மிடம் இல்லாத வளங்கள் மற்றும் செயல்களை கையகப்படுத்துதல் (Acquisition)

9. செலவு அமைப்புகள் (Cost structure)

வணிக வடிவமைப்பு மாதிரியின் கடைசி கட்டம் செலவு அமைப்புகளை திட்டமிடுதல். எங்கு செலவு செய்கிறோம்? எது மாதிரியான செலவுகளை செய்கிறோம்? வரவுக்கு தகுந்த செலவுகளை குறைக்க கூட்ட முடியுமா போன்றவை கணக்கில் எடுத்து திட்டமிட வேண்டும்.    

  • நம் தொழிலுக்கே உள்ள முக்கிய செலவுகள் என்ன?
  • எந்த வளங்கள் அதிக செலவு கொண்டவை?
  • எந்த செயல்கள் அதிக செலவு கொண்டவை?

நம் தொழில்

  • செலவுகள் மிக்கது (cost driven) – குறைவான செலவு (lean cost) , குறைவான விலை(low price), அதிகமான தானியங்கி உற்பத்தி (Automation), அதிகப்படியான வெளிப்புற பணி ஒப்படைப்பு (Outsourcing)
  • மதிப்பு மிக்கது (Value driven) மதிப்புகளை உண்டாக்குதல் மற்றும் அதிகபடுத்துதல் (value creation and increment) , உயர் தர மதிப்பு வரையறைகள் (Premium value proposition)

பண்புகள் (Characteristics)

  • நிரந்தர செலவுகள் (Fixed cost) – சம்பளம், வாடகை, பயன்பாட்டு செலவுகள்
  • மாறும் செலவுகள் (Variable cost) 
  • அளவு சார் பொருளாதாரம் (Economies of scale)
  • வாய்ப்பு சார் பொருளாதாரம் (Economies of scope)

“எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்”

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

தொழில் வடிவமைப்பு மாதிரி ஆவணமானது ஒரு பக்க ஆவணமாக இருந்தால் கூட, அனைவரும் புரிந்து கொள்ள கூடிய முழுமையான தொழில் ஆவணம். குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த மாதிரியானது நம் தொழிலுக்கு செய்வதன் மூலம் தொழில் சார்ந்த ஒரு தொலைநோக்கு பார்வை கிடைக்கும். நிறுவனத்தின் அனைத்து முக்கிய துறைகளையும் ஆலோசித்து உண்டாக்க படும் தொழில் வடிவமைப்பு மாதிரி வரைபடம், ஒரு மிக சிறந்த திட்டமிடல் ஆவணமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.